You are unique

Charisma promise of the year 2018:

You are in the mighty hand of the Lord, You are unique and
NO ONE IS LIKE YOU!
(based on the scripture 1 Samuel 21:9 )

“உனக்கு நிகரில்லை”

பட்டயமே!
நீ ஒரு காலத்தில ஓரு பெரிய இனத்தின் கடவுளாக கருதப்பட்ட கோலியாத் என்னும் மாவீரனின் கரத்தின் பிடியில் கூர்மையாகவும் செழிப்பாகவும் தான் இருந்தாய். அதனால் உண்மை தேவனை வணங்கும் மக்களை ஜென்ம விரோதிகளாக பகைத்தாய், அவர்கள் வணங்கும் தேவனை பற்றி அவதூறு பேசினாய்… உன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை… இன்று வரை கோலியாத்தான் உன் தேவனாய் இருந்தான்…
அதனால் தான் உனக்கு எத்தனை பெருமை இருந்தது …?

அவன் உன்னை பட்டை தீட்டி இன்றுவரை தேவ மக்களுக்கு எதிராக போரிட செய்தான் ..
எல்லா போரிலும் வெற்றி பெற்றவன் இன்றும் உன்னை ஆயுதமாக கொண்டு ஜெயிக்க போகிறான் என்று தான் நீ நினைத்திருப்பாய் ..

அந்தோ பரிதாபம்..! மனித வேட்டைக்கு போனவன் இன்று மரணத்திற்கு வேட்டையாக போனான்..
நீ நம்பின கடவுளும் இன்று கைவிட்டு போனான் ..
எவ்வளவோ வீர சாகசம் செய்த நீ இன்று ஜடமாகி போனாய் …
உனக்கு இனி போக்கிடமில்லை .
நீ வெறும் காட்சி பொருளாய் கூட இனி எண்ணப்பட மாட்டாய் ..

தோற்றுப்போனவனின் பட்டயமான
உன் நிலைமை நீ துருப்பிடிக்க ஆரம்பித்து விட்டது. உன்னால் இனி பயனில்லை ..
எதுவரைக்கும் என்றால் தாவீது என்னும் வாலிபன் உன்னை கையிலெடுக்கும் வரை தான்…

அந்த நாளை உன் தானைத்தலைவன் செத்தவுடன் ஒருவரும் உன்னை கண்டு கொள்ள இயலவில்லை ஓடிப்போனார்கள் ..
வீழ்த்தியது யார் தெரியுமா ??
ஒரு பொடி பையலாக கோலியாத்தினால் பார்க்கப்பட்ட தாவீது என்னும் டீன் வயது பையன் ..
இந்த தாவீது வீழ்த்திய விதம் அழகாக ( 1 சாமுவேல் )
ல் விவரிக்கப்பட்டுருக்கிறது.

கோலியாத்தின் பட்டயமே!
இப்பொழுது உன்னை கையில் எடுத்தது தாவீது உன்னை கொண்டு இதுவரை அரக்கத்தனமாக கொன்று குவித்த கோலியாத்தின் தலையை அவனுடைய பட்டயமான உன்னை கொண்டே வெட்டி எடுத்தான் ..
இராட்சதத் தலைவனை தாவீது அனாயாசமாக தீர்த்துகட்டி விட்டதால் சத்துருக்கள் சத்தமில்லாமல் ஓடி போனார்கள்.
ஜெயம் தாவீதுனுடையதாக மாறியது..

இதை வாசிக்கும் நண்பனே, கோலியாத்தின் பட்டயம்
யார் என்றால் நீதான் ..
கேட்பாரற்று கிடந்த உன்னை யாருக்கு விரோதமாக நீ போராடினாயோ இன்று பரம தாவீதாகிய இயேசுவே கையிலெடுத்து வீட்டார் ..
இந்த உலகத்தில் நீ ஜெயித்து கொண்டு இருந்தால் மட்டுமே மதிப்பு ..
நீ யாரிடமிருந்தாயோ அவனே இன்று மரித்து போய் விட்டான். அருமையான சகோதரனே.. சகோதரியே …
உன் நம்பிக்கை பொய்த்து நீ நம்பினவர்கள் காணாமல் போய் ..
உனக்குரியவர்கள் உன்னைவிட்டு துர்க்கதியாய் போனாலும் .. இந்த செய்தி இந்த வாக்குததம் உனக்கு ..
அந்நிய தெய்வத்தை வணங்கும் தேசத்தில்…
உன்னைக்கொண்டு உன் கடந்த கால கோலியாதை வீழ்த்த இந்த பரம தாவிதினால் முடியும்.
அவரால் முடியாத காரியம் ஒன்று மில்லை எங்கோ எப்படியோ முடிய வேண்டிய உன் வாழ்க்கை இன்று புதுப்பிக்க படுகிறது ..

உன்னை கையில் எடுத்தவர் பெரியவர்..
உன்னை கொண்டு இனி வரும் யுத்தங்களை ஜெயிக்க போகிறார் ..
அர்த்தமில்லாமல் வெறும் ஜடமான யாருக்கோ சேவை செய்து வந்த உன்னை பயன்படுத்த போகிறார் ..
கோலியாத்தை வீழ்த்தியது மாத்திரமல்ல .. பெரிய திட்டங்கள் உனக்காக இரண்டாவது innings ல் உண்டு நீ இன்னும் செய்ய வேண்டிய சேவைகள் ஏராளம். சற்று பொறுமையாக தேவன் செய்யும் கிரியைகளுக்கு ஒப்புக்கொடு. அவர் பயன்படுத்துவார். இதை விட வாழ்க்கையில் பாக்கியம் வேறே என்ன இருக்க முடியும் உனக்கு ?.. ஆம், கர்த்தரின் தயவுள்ள கரத்தில் நீ இருக்கிறாய். உனக்கு ஈடு இணை இல்லை உனக்கு யாரும் நிகரில்லை ..

இந்த 2018ல் மட்டும் இல்லை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டுமாக உன்னை கொண்டு பெறும் யுத்தங்களை ஜெயிக்கப்போகிறார் ..
கர்த்தரின் பட்டயமே
உனக்கு ஒப்பானவன் யார் ?? – எஸ்ரா 7 :6
தேவனுடைய தயவுள்ள கரம் என்னோடு இருப்பதினால் உனக்கு எதிராக உருவாகும் எந்த ஆயுதமும் வாய்க்கதே போம்..
ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*